ஈரோடு ஜூலை 7
ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது இந்த கூட்டத்திற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மோகன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார் சிலர் ஆன்லைன் மூலமாக தங்களது கோரிக்ககளை தெரிவித்திருந்தனர்
இது குறித்து உதவி செயற் பொறியாளர் செல்வ கணபதி கூறியதாவது
இந்த ஆண்டில் ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதி குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது கடந்த ஏப்ரல் மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளினால் கூட்டம் நடத்தப்படவில்லை இருப்பினும் ஆன்லைனில் வரும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம் இன்றைய கூட்டத்தில் இரண்டு பேர் நேரில் வந்து மனு வழங்கினார் இந்த ஆண்டில் இதுவரை நடந்த கூட்டத்தில் மொத்தம் 21 மனுக்கள் புகார் மனுக்கள் பெறப்பட்டு அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மேலும் புகார்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் இரண்டு ஆண்டுகளில் மட்டும் கழிவு நீரை முறையாக சுத்திகரிக்காமல் வெளியேற்றுதல் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காதது போன்றவற்றின் கீழ் 138 சாய சலவை பிரிண்டிங் தோல் தொழிற்சாலைகள் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது
இவ்வாறு அவர் கூறினார்.