நாகர்கோவில் பிப் 2,
கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மாவட்டம் முழுவதும் தொடர் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களில் கனிமவளத் துறையின் அனுமதியின்றி மற்றும் அதிக பாரத்துடன்(Overload) கனிம வளம் ஏற்றி வந்த இரண்டு வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 12 பேர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கைகள் வரும் நாட்களில் மேலும் தீவிரப்படுத்தப்படும்.