திருப்பத்தூர்: டிச:31,
திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ அரச மர விக்ன விநாயகர் ஆலயம் அருகில் பதினோராம் ஆண்டு ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி விழா மற்றும் திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீ அனுமன் ஜெயந்தி விழா குழு மற்றும் விஜய பாரத மக்கள் கட்சியினர் இணைந்து நடத்தினர்.
இவ்விழாவிற்கு விஜய பாரத மக்கள் கட்சி மாநிலத் துணைத் தலைவர் சக்தி தலைமையில் நடைபெற்றது. சிவ சேனா கட்சியின் மாநில செயலாளர் பிரகாஷ், திருப்பத்தூர் திருக்கோயில்கள் சொத்து மீட்பு குழு துணை அமைப்பாளர் கார்த்திகேயன், சங்கர், ஸ்ரீ லட்சுமி சரஸ்வதி பஸ் சர்வீஸ் தண்டபாணி, விஜய பாரத மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் விஜய் பாரத மக்கள் கட்சி நகரத் தலைவர் அசோகன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக விஜய பாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் கோ ஸ்ரீ ஜெய்சங்கர், உலகளாவிய ஓம் நமச்சிவாய மற்றும் ஆன்மீக கூட்டமைப்பு அறக்கட்டளை ஓம் குடில் திருவண்ணாமலை சிவ திரு வெற்றிவேல் சுவாமிகள் கலந்து கொண்டு 2000 பேருக்கு அன்னதானம் மற்றும் ஸ்ரீ அனுமன் திருவீதி விழாவினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் விஜய பாரத மக்கள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் சரவணன், மாவட்டத் தலைவர் சசிக்குமார், வேலூர் புறநகர் மாவட்ட தலைவர் பிரபு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேலன், ஆம்பூர் அலுவலக செயலாளர் ஆனந்தன், திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர் சுதாகர், மாவட்ட பிரதிநிதி பழனி, அணைக்கட்டு ஒன்றிய அமைப்பாளர் நேதாஜி ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
மேலும் இவ்விழாவில் ஸ்ரீ அனுமன் சிறுநீதி உலாவானது முக்கிய திருவீதிகளில் சென்று அன்னதானம் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.