மதுரை மே 18,
மதுரையில் 11 பேருக்கு மர்ம காய்ச்சல்
மதுரை மாநகர் பகுதியில் நேற்று ஒரே நாளில் 11 பேருக்கு வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று 300-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 11 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது 11 பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மதுரையில் பெய்து வரும் தொடர் மழையால் டெங்கு காய்ச்சல் தடுப்பு ஊசி மற்றும் சிறப்பு வார்டு நேற்று அமைக்கப்பட்டுள்ளது. 28 படுக்கைகள் கொண்ட தனி வார்டில் கொசு வலையுடன் சிறப்பு படுக்கைகள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கும் வகையில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. எனவே காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவர் அனுமதி இன்றி தாமாக மருந்து கடைகளில் மருந்துகளை வாங்கி பயன்படுத்த வேண்டாம். காய்ச்சல் இருமல் மற்றும் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்