தேனி | செப். 23:
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. இரா. வைத்திநாதன், இ.ஆ.ப., அவர்களை செய்தி மக்கள் தொடர்புத் துறையினர் சந்தித்து, தமிழ்நாடு அரசின் 100 நாள் சாதனைகளை விளக்கும் சாதனை மலர் மற்றும் காலப்பேழை புத்தகங்களை வழங்கினர்.
தமிழ்நாடு அரசின் 100 நாள் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள், முக்கிய அறிவிப்புகள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் அரசின் முக்கிய நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் வகையில் இப்புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை அறிந்துகொள்ளும் வகையில் இவை வழங்கப்படுகின்றன.
இந்நிகழ்வில் PRO பாண்டியன் மற்றும் APRO முத்துக்குமார் ஆகியோர் சாதனை மலர் மற்றும் காலப்பேழை புத்தகங்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.



