திருப்பத்தூர்: ஜூலை:14, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முழுநேர கிளை நூலகத்தில் 11.7.2024 அன்று 100 பள்ளி மாணவ மாணவிகளை உறுப்பினராக சேர்த்த நிகழ்வு. இந்நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்டத்தில் புதியதாக மாவட்ட நூலக அலுவலராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட ம.தனலட்சுமி மா.நூ.அலுவலர் தலைமை ஏற்றார்.வாசகர்வட்டத் தலைவர் ம.பார்தீபன் சுகாதார ஆய்வாளர் (ஓய்வு), கே.எம்.டி.சரவணன் தொழிலதிபர் வாசகர் வட்ட துணை தலைவர் முன்னிலை வகித்தனர். இரண்டாம் நிலை நூலகர் வ.மணிமாலா அனைவரையும் வரவேற்றார். நன்கொடையாளர்கள் திருமால் ரூ1500/- செலுத்தி 50 நூலக உறுப்பினரும், ஜமீல்அஹமது ரூ.1500/_செலுத்தி 50 நூலக உறுப்பினரும் சேர்த்தனர் ஆக மொத்தம் 100 பள்ளி மாணவ மாணவிகள் நூலகத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட்டனர். நூலகர் ஜெ.விஜயகுமார் நன்றி கூறினார். இந்நிகழ்வில் நூலக பணியாளர் எஸ்.காயத்ரி, நூலக வாசகர்கள் மற்றும் போட்டித் தேர்வு மாணவர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்வின் முடிவில் நன்கொடையாளர்களுக்கு பொது நூலகத் துறை யின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.



