By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திங்கள் சந்தையில் போலி நகைகள் கொடுத்து பெண்ணிடம் ரூ 1 .75 லட்சம் மோசடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திங்கள் சந்தையில் போலி நகைகள் கொடுத்து பெண்ணிடம் ரூ 1 .75 லட்சம் மோசடி
கனஂனியாகுமரி

திங்கள் சந்தையில் போலி நகைகள் கொடுத்து பெண்ணிடம் ரூ 1 .75 லட்சம் மோசடி

Last updated: June 19, 2025 2:17 pm
June 19, 2025
36 Views
Share
SHARE

குளச்சல், ஜூன் 19 –

மண்டைக்காடு புதூர் பகுதியைச் சேர்ந்தவர் குளோரி (60), மீன் வியாபாரி. நேற்று முன்தினம் மதியம் மீன் வியாபாரத்தை முடித்துக் கொண்டு காய்கறி வாங்குவதற்காக திங்கள் சந்தைக்கு வந்தார். பஸ் ஸ்டாண்ட் அருகே காய்கறிகள் வாங்கும் போது அங்கு வந்த சுமார் 35 மதிக்கத்தக்க பெண் குளோரியிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார். அவரிடம் 10 பவுன் தங்க நகைகள் இருப்பதாகவும் அவசரமாக பணம் தேவைப்படுவதால் அதை தங்களிடம் தருகிறேன். அதற்கான பணத்தையும் இருக்கும் நகையும் தந்து உதவுங்கள் என்று கூறியுள்ளார். பேச்சுக்கு மயங்காத குளோரி நீங்கள் தருவது உண்மையான நகையா என எனக்கு எப்படி தெரியும் ? அதனால் நாம் அருகில் உள்ள தங்க நகை கடைக்குச் சென்று பரிசோதித்துக் கொள்வோம் என்று கூறி நகைக்கடைக்குச் சென்றுள்ளனர். அப்போது சுதாரித்துக் கொண்ட மர்ம பெண் மூதாட்டியிடம் நீங்கள் இங்கு நின்று கொள்ளுங்கள். நான் உள்ளே சென்று அதன் மதிப்பு குறித்து கேட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார். சிறிது நேரத்தில் வெளியே வந்த மர்ம பெண் நகைகள் ரூபாய் 10 லட்சத்துக்கு மேல் மதிப்பு இருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால் உங்களிடம் இருக்கும் பணம் மற்றும் நகையைத் தாருங்கள் என்று கூறியுள்ளார். இது உண்மை என்று தம்பிய மூதாட்டி மீன் விற்று வைத்திருந்த ரூபாய் பத்தாயிரம், தன்னுடைய கழுத்தில் கிடந்த தங்கச் செயின், இரண்டு கம்மல் என சுமார் 4 பவுன் எடை கொண்ட தங்க நகைகளையும் கழற்றி மர்ம பெண் இடம் கொடுத்துள்ளார். இதை பெற்றுக்கொண்ட மர்ம பெண் போலி நகைகளை மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு சிறிது நேரத்தில் மாயமாகிவிட்டார். பின்னர் மூதாட்டி மண்டைக்காட்டில் உள்ள உறவினர்களிடம் நகைகளைக் காட்டியுள்ளார். அப்போது இது திருட்டு நகையாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர். பயந்து போன மூதாட்டி நகைகளைப் போலீசில் ஒப்படைத்து விடுவது என்று இரணியல் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்குப் போலீசார் விசாரணையில் மூதாட்டி வைத்திருந்தது போலி நகை என்றும் மர்ம பெண் மூதாட்டியை ஏமாற்றியதும் தெரியவந்தது. போலீசார் மூதாட்டி கூறிய நகைக்கடைக்குச் சென்று விசாரித்தனர். அப்போது அதுபோன்று யாரும் எங்களிடம் வந்து நகையைக் காட்டவில்லை என்று நகைக்கடைக்காரர் கூறியுள்ளார். மேலும் நகைக்கடைக்குள் வந்து சும்மா நின்றிருப்பதும் பின்னர் சிறிது நேரம் கழித்து நகைக் கடைக்காரரிடம் பேசியது போன்று வெளியே வந்து நாடகமாடி நகையை மூதாட்டியிடமிருந்து பறித்துக் கொண்டு சென்றிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. போலீசார் நகைக்கடை மற்றும் சந்தைப் பகுதிகளில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளோரியிடம் பறிக்கப்பட்ட பணம் நகைகளின் மதிப்பு ரூபாய் 1.75 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

மழைநீர் வடிகால் ஓடைப்பணி தொடக்கம்
கடையாலுமூட்டில் ஓட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
விளவங்கோடு தொகுதி மக்களின் விருப்பப்படி பாரதிய ஜனதாவில் போட்டியிடுகிறேன்: விஜயதரணி பேட்டி
தற்காலிக பொறுப்பாளராக ஜான்தங்கம் நியமனம்
8 பேரை புதுக்கடை போலீசார் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்ட பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

July 24, 2024
77 Views
ஜல் ஜீவன் திட்டம், கலைஞரின் கனவு இல்லம் திட்டம்
குளச்சல் போர் மறைக்கப்பட்ட வீர வரலாற்றை மீட்டெடுப்போம்; பிரின்ஸ் எம்எல்ஏ சூளுரை
களியக்காவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தென்னை விவசாய சங்கம் சார்பில் நாற்காலிகள் வழங்கல்
போக்குவரத்து போலீசாருக்கு மழை கோட் வழங்கிய அகில இந்திய மக்கள் நல கழகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account