மதுரை ஜூலை 27
மதுரை
சொக்கிகுளம் பிடி.ராஜன் சாலையில் உள்ள ஆகாஷ் நீட் கோச்சிங் சென்டரில்
நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில்
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) இன் சிஇஓ மற்றும் எம்டி
தீபக் மெஹ்ரோத்ரா பேசுகையில் எண்ணற்ற மாணவர்களின்
அபிலாஷைகள் மற்றும் திறன்களுக்கு இடையேயான இடைவெளியை
குறைப்பதில் ஆன்தே முக்கியப் பங்காற்றியுள்ளது.
ஆன்தே வின் 15 வது ஆண்டை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் உள்ள தகுதியான
மாணவர்களுக்கு அவர்களின் இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல் எங்கள்
கல்விச் சேவையை அவர்களுக்கு சென்று சேரும் வகையில் நாங்கள்
உழைத்துள்ளோம்.
மேலும்
நீட் ,ஐஐடி, ஜி,
தேர்வுகளுக்கு மாணவர்கள்
எங்கிருந்தாலும் அவர்களின் சொந்த முயற்சியில் தயாராவதற்கு ஆன்தே
உதவுகிறது. அந்த வகையில் 2024 இல் மாணவர்களின் வலுவான பங்கேற்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்
அதேபோல் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி மாணவர்களை வழிநடத்தும் பொறுப்பில் நாங்கள் உள்ளோம்
மேலும் ஆன்தே 2024 ஆண்டு பதிவுக்கான படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கு கடைசித் தேதி ஆன்லைன் தேர்வு தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பும் ஆஃப்லைன் தேர்வு தொடங்குவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பும் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் தேர்வுக்கான கட்டணம் INR 200 ஆகும். மாணவர்கள் 15 ஆகஸ்ட் 2024 க்கு முன் பதிவு செய்தால் பதிவுக் கட்டணத்தில் 50% தள்ளுபடியைப் பெறலாம்
இதற்கான முடிவுகள் நவம்பர் 08, 2024 அன்று பத்தாம் வகுப்பு
மாணவர்களுக்கும், நவம்பர் 13, அன்றும், VII முதல் IX வகுப்பு வரையிலும் நவம்பர் 16, இல் XI மற்றும் XII மாணவர்களுக்கும் அறிவிக்கப்படும் முடிவுகள் எங்கள் ANTHE இணையதளத்தில் anthe.aakash.ac.in.இல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.