நாகர்கோவில், மே. 12-
10ம் வகுப்பில் மாவட்ட அளவில் 3-வது இடம், குமரி பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு பி.டி செல்வகுமார் ஸ்கூட்டி பைக் பரிசு வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்தவர் வடிவேல் முருகன் இவர் மிட்டாய் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் குமரி பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி நந்தினிக்கு பி.டி.செல்வகுமார் நேரில் சந்தித்து ஸ்கூட்டி பைக் பரிசு வழங்கினார். வருங்கால தலைமுறைகள் சிறப்பாக படித்து எல்லா மாணவச் செல்வங்களும் மற்றும் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவும் வருடந்தோறும் படிக்கின்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவித்து வருகின்றோம். தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களும் எதிர்காலம் இந்தியா அவர்கள் கையில் உள்ளது என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவர்களுக்கும் என் மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உடன் கலப்பை மக்கள் இயக்க மீனவ தலைவர் ஜோசப் கென்னடி கலந்து கொண்டார்.