நாகர்கோவில், செப்டம்பர் 23 –
ஜிஎஸ்டி வரி குறைப்பை முன்னிட்டு நேற்று காலையில் நாகர்கோவில் ஸ்டார் ஹெல்த் அலுவலகத்தில் “ஜி.எஸ்.டி. இல்லாத பாலிசி கொண்டாட்டம்” விழா நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ., எம்.ஆர். காந்தி கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:
மத்திய அரசு 22-9-2025 முதல் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கான ஜிஎஸ்டி வரியை இந்தியா முழுவதும் முற்றிலுமாக நீக்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முதல் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்சில் 0% ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது. இதை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மருத்துவ காப்பீடு எடுப்பதற்கு இனி ஜிஎஸ்டி கிடையாது. ஜிஎஸ்டி இல்லாமல் மருத்துவ காப்பீடு எடுக்கும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொண்டு, குடும்பத்தினருக்கு காப்பீடு எடுத்து வாடிக்கையாளர்கள் பயன்பெற வேண்டும். இதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்-க்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதில் டாக்டர். பாலா, மேனேஜர் சங்கர் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினர். நாகர்கோவில் அலுவலக மேலாளர் ஸ்ரீகுமார் நன்றி கூறினார். இதில் நாகர்கோவில் அலுவலக விற்பனை மேலாளர்கள், மற்றும் முகவர்கள் கலந்து கொண்டனர்.



