தூத்துக்குடி மாவட்டம், செப்.04.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளியின் 13-ம் ஆண்டு விழா பள்ளிக்கல்விக் குழுமத் தலைவர் வீமராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் பள்ளிச் செயலர் சுப்பா ரெட்டியார் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, கடந்த கல்வியாண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவரும் வகையில் சிறப்பாக நடைபெற்றன.
நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக அதிகாரி கணேசன், முதல்வர் அமராவதி, ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் நிர்வாகக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.



