வேலூர், ஆகஸ்ட் 14 –
ஷேரன் ஹெல்த் கேர் இன்ஸ்டிடியூட் 10-ம் ஆண்டு விழா மற்றும் 2024-25 ஆண்டு செவிலியர் மாணவியர்களுக்கான பட்டமளிப்பு விழா சத்துவாச்சாரியில் நடைபெற்றது.
விழாவிற்கு இன்ஸ்டிடியூட் தாளாளர் அரவிந்தா ஜான் தலைமை தாங்கினார். முதன்மை மேலாளர் கிறிஸ்டி பாபு அனைவரையும் வரவேற்றார். முதன்மை அதிகாரி ஆனிவல்சன் தலைமையில் மாணவியர்கள் உறுதிமொழியேற்றனர்.
சிறப்பு விருந்தினராக சிஎம்சி மருத்துவமனையின் செவியர் தலைமை கண்காணிப்பாளர் (ஓய்வு) முனைவர் பாலசீத்தாராமன் சிறப்புரையாற்றி 25 மாணவியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். பல்வேறு செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய 5 மாணவியர்களுக்கு சிறப்பு பரிசாக கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை வில்சன் தயாநிதி செய்திருந்தார். முடிவில் மேற்பார்வையாளர் கிறிஸ்டி சாம்சன் நன்றி கூறினார்.



