ஒட்டப்பிடாரம், செப்டம்பர் 05 –
கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 154-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இன்று ஒட்டப்பிடாரத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் க. இளம்பகவத், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் சார் ஆட்சியர் கோவில்பட்டி ஹிமான்ஷூ மங்கல் ஐக், வ.உ. சிதம்பரனார் அவர்களின் வாரிசுதார் உ. செல்வி ஆகியோர் உள்ளனர்.



