குளச்சல், ஆக. 19 –
வெள்ளிச்சந்தை அருகே ஈசன்தங்கு பகுதியை சேர்ந்தவர் செல்வன் மகன் அகில் கண்ணன் (25). கேட்டரிங் படித்து உள்ளார். அவரது நண்பர்கள் நாகர்கோவில் சேர்ந்த சச்சின், குளச்சலை சேர்ந்த ஆஷிக் மற்றும் கிதியோன். இவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அகில் கண்ணன் நண்பர்களிடமிருந்து நகைகளை வாங்கி அடகு வைத்து ரூபாய் 1.50 லட்சம் பெற்று உள்ளார். பின்னர் நகைகளை திருப்பி கேட்ட போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இதற்கிடையில் சம்பவத்தன்று அகில் கண்ணன் வீட்டின் முன்புறம் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சச்சின், ஆஷின், கிதியோன் ஆகியோர் தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்துள்ளனர். மேலும் ஆத்திரம் அடைந்தவர்கள் அகில் கண்ணனை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதை தொடர்ந்து உறவினர்கள் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் போலீசார் சச்சின், ஆஷிக், கிதியோன் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


