திருப்பூர், ஜூன் 01 –
திருப்பூர் கருவம்பாளைம் KV நகரில் உள்ள திருப்பூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார் முன்னிலையில் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்யும் நிகழ்ச்சியில் பல் சமய நட்புறவு கழகம் பல்லடம் ஒன்றிய தலைவர் முகமது அலி தலைமையில் மாவட்ட தலைவர் ஷாஜஹான், மாவட்ட இளைஞர் அணி தலைவர் உசேன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சுரேஷ், மாவட்ட இளைஞர் இணை செயலாளர் தங்கராஜ், மாநகர இணைசெயலாளர் சர்புதீன், இளைஞர் அணி பிரம்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விடுதலைப் போராட்டத்தில் தன்னலமற்ற சேவையால் வரலாற்றில் இடம்பிடித்த அஞ்சலையம்மாள் அவர்களின் தியாகமும், நாட்டுப்பற்றும் என்றும் தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக விளங்கும் என தெரிவித்தனர்.



