விவகாரத்து பெற்றுத் தருவதாக கூறி ரூ 13 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவனின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ். பி. அலுவலகத்தில் பெண் புகார் மனு
நாகர்கோவில் மே 1
கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணத்தை சேர்ந்த மேரி கிறிசிபா என்ற பெண்மணி நாகர்கோவிலில் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார்.அதில் என் கணவர் பாஸ்கர் இருவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டோம். மன வேதனையில் இருந்த என்னை கனவரின் உறவினர்கள் சிலர் சேர்ந்து எனக்கு ஆறுதல் கூறுவதாக வந்து கூறி, உனக்கும் பாஸ்களுக்கும் விவாகரத்து வாங்கி தருகிறோம் என பல ஆசை வார்த்தைகள் கூறியதால் அவர்கள் வலையில் என்னை விழவைத்து விட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி என்னிடம் இருந்து 13 லட்சம் ரூபாயை மோசடி செய்து விட்டனர்.. இது சம்பந்தமாக கடியப்பட்டிணத்தை சேர்ந்த ஷீபா, பால்சன் பெகி ஆகியேர் மீது . மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் நான் புகார் கொடுத்தும் போலீசார் முறையாக நடவடிக்கை எடுக்க வில்லை . இதனை தொடர்ந்து அவர்கள் என்னை மிரட்ட ஆரம்பித்தனர் நீ காவல் நிலையத்திற்கு சென்றாலும் உன் மனு மீது அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்க மாட்டார்கள் என மிரட்டியதாக மேரி கிறிசியா தன் புகாரில் கூறியுள்ளார் . எனவே வேறு வழியின்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தேன் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.