விழுப்புரம், ஆகஸ்ட் 21 –
விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விழுப்புரம் மாவட்ட பிரிவில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் கூடைபந்து, கபாடி, கையுந்து பந்து, கைப்பந்து, கால்பந்து, தடகளம், சிலம்பம், பூப்பந்து, ஆகிய விளையாட்டு போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆகியோர்களுக்கு (26.08.2025 முதல் 10.09.2025 வரை) மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கோ-கோ விளையாட்டு போட்டி (28.08.2025 முதல் 31.08.2025 வரை) ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள், ஆகியோர்களுக்கான கிரிக்கெட் போட்டியானது (28.08.2025 முதல் 08.09.2025 வரை) சிகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் போட்டியானது (01.09.2025 முதல் 05.09.2025 வரை) மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆகியோர்களுக்கான இறகுபந்து போட்டியானது (01.09.2025 முதல் 08.09.2025 வரை) மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான, மேசைப்பந்து போட்டியானது (table tennis) (01.09.2025 முதல் 04.09.2025) வரை கணபதி டேபில் டென்னிஸ் அகாடமி(ரெட்டியார் மில்)நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆகியோர்களுக்கான கேரம் போட்டியானது (28.08.2025 முதல் 03.09.2025 வரை) ஜான்டுவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் (வி.மருதூர்)நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், அரசு ஊழியர்கள், ஆகியோர்களுக்கான செஸ் போட்டியானது (02.09.2025 முதல் 06.09.2025) வரை ஜான்டுவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் (வி.மருதூர்) நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான ஹாக்கி போட்டியானது (01.09.2025 முதல் 06.09.2025 வரை) மயிலம் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையத் தளத்தில் பதிவு செய்த வீரர், வீராங்கனைகள் மேற்கண்ட தேதிகளில் காலை 7.00 மணிக்கு குறிப்பிட்ட இடங்களில் ஆஜராகிட வேண்டும். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியர்கள் அவர்களுக்கான Bonafied Certificate, பொதுப்பிரிவினர் இருப்பிட சான்றிதழ், அரசு ஊழியர்கள் அடையாள அட்டை நகல், மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளி அட்டை நகல் மற்றும் அனைத்து பிரிவினரும் ஆதார் அட்டை நகல், வங்கி புத்தக நகல் கட்டாயம் கொண்டுவர வேண்டும். எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் பதிவு செய்த அனைத்து வீரர், வீராங்கனைகளும் குறிப்பிட்டுள்ள ஆவணங்களுடன் குறிப்பிட்ட தேதியில் போட்டிகளில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு. ஆழிவாசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



