விளாத்திகுளம், அக்டோபர் 30 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54வது துவக்க விழாவை முன்னிட்டு விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் மகேஷ், இராமச்சந்திரன், பால்ராஜ் ஆகியோர் ஏற்பாட்டில் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் குட்லக் செல்வராஜ், விளாத்திகுளம் அதிமுக நகர செயலாளர் மாரிமுத்து, எட்டையாபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார், கோவில்பட்டி மகளிர் இளம்பெண்கள் பாசறை கவியரசன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் போடுசாமி, தனவதி, தனஞ்செயன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட தலைவர் மோகன், புதூர் அதிமுக நகரச் செயலாளர் ஆண்டி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் பிரியா, மகளிர் அணி நிர்வாகி சாந்தி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே சிறப்புரையாற்றினார். அப்போது முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், பெண்களிலேயே தகுதி உள்ள பெண்கள், தகுதி இல்லாத பெண்கள் என பிரித்த ஆட்சி திமுக ஆட்சி. இப்போது தேர்தல் வருகிறது என்றவுடன் கணக்கெடுப்பு நடத்துகிறார்கள். அவர்கள் மகளிர் உரிமைத்தொகை ரூ.1500 தருவதாக கூறுகிறார்கள், நாங்கள் சொல்கிறோம் எடப்பாடி ஆட்சிக்கு வந்தால் ரூ.2000 தருகிறோம்.
2021 தேர்தலில் அதர்மம் வென்று தர்மம் தோற்றது; 2026 தேர்தலில் தர்மம் வென்று அதர்மம் வீட்டிற்குச் செல்கின்ற தேர்தல் தான் 2026. விளாத்திகுளம் தொகுதியில் அண்ணா திமுகவை ஜெயிப்பதற்கு எவனாலும் முடியாது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுகவால் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும். அதேபோல், திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்டு செயல்படுத்தப்படவில்லை என விமர்சித்து பேசினார்.



