தென்காசி, அக். 2 –
விஜயதசமியில் குழந்தைகளின் கல்வியை துவங்கினால் கல்வி கடவுள் சரஸ்வதியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் அமைந்துள்ள லயன்ஸ் மகாத்மா ஸ்கூலில் மாணவ மாணவிகள் சேர்க்கை நடைபெற்றது.
இதில் பள்ளிக்கு பெற்றோருடன் வந்த குழந்தைகள் தாம்பலத்தில் பரப்பிய அரிசியில் குழந்தைகளின் கைகளை பிடித்து ‘அ’ எழுத்து எழுத வைத்து கல்வியை தொடங்கினர். அந்த வகையில் விஜயதசமியில் மாணவர்கள் சேர்க்கை வெகு சிறப்பாக சிறப்பாக நடைபெற்றது.



