முதுகுளத்தூர், ஜூலை 20 –
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில், வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் “லஞ்சம் தவிர… நெஞ்சம் நிமிர்” என்ற தலைப்பில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை காந்தி சிலை அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதுகுளத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். நகர செயலாளர் சையது மீரா முன்னிலை வகித்தார். முகைதீன் சையது வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சோ. ரங்கநாதன் கலந்து கொண்டு, ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் கீரனூர் புவனேஸ்வரன், வட்டார தலைவர் முனீஸ்வரன், செந்தில், வென்னீர் வாய்க்கால் சந்திரபோஸ், தேரிருவேலி நாகலிங்கம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தனர். முடிவில் பாலா சஞ்சய் நன்றியுரை வழங்கினார்.



