கன்னியாகுமரி, ஜூலை 11 –
ஆறுகாணி அருகே அணைமுகம் செல்லும் சாலையில் அணைமுகம் பம்பு அருகில் கனமழை காரணமாக சாலையோரம் அரிக்கப்பட்டு பெரும் விபத்து ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இச்சாலை வழியாக பேருந்துகள் செல்லும் போது சாலை இடிந்து ஆற்றில் விழும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது பள்ளம் உள்ளதை அறிய சிவப்பு கொடி நிறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் சாலை அரிப்பை சீரமைக்க வேண்டுமென ஊர் மக்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.



