இராமேஸ்வரம், அக். 15 –
தமிழக அரசு ராமேஸ்வரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை தரம் உயர்த்தப்பட்டதற்கு மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் புதிய தீயணைப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ராமேஸ்வரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை தரம் உயர்த்தப்பட்டு கூடுதலாக ஒரு தீயணைப்பு ஊர்தி மற்றும் புதிதாக எட்டு காவலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். மதுரை துணை இயக்குனர் ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். ராமேஸ்வரம் நகர்மன்ற துணை தலைவர் பிச்சை என்ற தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் 18 வது வார்டு கவுன்சிலர் அர்ஜுனன் தீயணைப்பு பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா நிறைவில் ராமேஸ்வரம் தீயணைப்பு நிலை அலுவலர் அருள்ராஜ் நன்றியுரை ஆற்றினார்.



