By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது
இராமநாதபுரம்

ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது

Last updated: June 26, 2025 4:07 pm
June 26, 2025
79 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜூன் 26 –

ராமநாதபுரம் நகர்மன்றக் கூட்டம் நடந்தது. நகர்மன்றத்தலைவர் கார்மேகம் தலைமை வகித்தார். ஆணையர் அஜீதா பர்வீன், துணைத் தலைவர் பிரவின் தங்கம் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் நகர்மன்றக் கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. நகர்மன்றத் தலைவர் கார்மேகம் தலைமை வகித்தார். நிறைவேற்றப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் தொடர்பாக 66 தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் நகராட்சி கழிவு நீர் சுத்தரிகரிப்பு நிலையம் நகரில் உள்ள 5 பம்பிங் ஸ்டேஷன், 2 லிப்ட் ஸ்டேஷன் மற்றும் கழிவு நீர் குழாய் அடைப்புகள் நீக்கல் பணியை ஜூலை 31 வரை பணி செய்ய மதிப்பீடு தொகை ரூ.28.50 லட்சத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி, மே 20 ல் ஒப்பந்தப்புள்ளி கோரியதில் மதிப்பீடு ரேட்டை விட 26.23 சதவீதம் குறைவு ஆக வரப்பெற்றது. இதன்படி, பணியின் தரத்தில் நம்பகத்தன்மை, தாமதம், அதிருப்தி ஏற்படக்கூடும் என கவுன்சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து இப்பணி தொடர்பாக மறு ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் என நகர்மன்றத் தலைவர் கார்மேகம் கூறினார்.

ராமநாதபுரம் நகராட்சி பாதாள சாக்கடை இயக்குதல் மற்றும் பராமரிப்பு ரூ.28.50 லட்சம் மதிப்பில் மேற்கொள்ள கவுன்சிலர் அய்யனார் (எ) ராமசுப்ரமணியன் (திமுக) எதிர்ப்பு தெரிவித்தார். ராமநாதபுரம் நகராட்சி சாலை ஓர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதுகாத்தல், வியாபாரத்தை ஒழுங்குபடுத்தல் ஆலோசனை கூட்ட முடிவின் படி
ராமநாதபுரம் அரண்மனை பகுதி – மணிக்கூண்டு பகுதி உள்ள சாலை ஓர வியாபாரிகளை ஒழுங்குபடுத்த ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவெடுக்கப்பட்டது.
சாலை தெருவில் அனுமதியின்றி பதிவில்லாத ஆட்டோ நிறுத்தங்களை அப்புறப்படுத்த போக்குவரத்து காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

சாலை தெருவில் போக்குவரத்து நெரிசலாக உள்ளதால் பொது மக்கள் வாகனங்களை
தற்காலிகமாக நிறுத்த இடம் ஒதுக்கீடு செய்ய தர கோரி வர்த்தக சங்கம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சன்னதி தெருவில் சாலை ஓர வியாபாரிகள் விற்பனை செய்ய எதிர்ப்பில்லை என சாலையோர வியாபார சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
தற்போதைய சந்தை பேட்டை பகுதியில் பள்ளிகள் உள்ளதால் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் போது சாலை ஓர வியாபாரிகளால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அரண்மனை தெரு, சாலைத்தெரு,
சன்னதி தெரு கீரைக்கார ஊருணி மேற்கு தெரு பகுதிகள் வியாபாரிகள் கடை விரிக்கவும், சந்தை பேட்டை ரோடு, சின்னக்கடை ரோடு, தலைமை தபால் அலுவலகம் ரோடு பகுதிகளில் வியாபாரிகள் கடை விரிக்க உகந்த இடமாக தேர்வு செய்யப்பட்டது. சந்தை பேட்டை ரோடு, சின்னக்கடை ரோடு பகுதி வியாபாரிகள் நலன் கருதி இத்தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய கவுன்சிலர் காதர் பிச்சை (மமக) வேண்டுகோள் விடுத்தார்.

பாரதப் பிரதமரின் ஜல் ஜீவன் திட்டத்திற்கு புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் என பெயர் மாற்றம் செய்து மத்திய அரசின் திட்டத்தை இருட்டிப்பு செய்வது ஏன்? கவுன்சிலர் குமார் (பாஜக) விவாதம் செய்தார். இத்திட்டத்திற்கு அம்ருத் 2:0 என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது என ஆணையர் அஜிதா பர்வீன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் புனரமைக்கப்பட்டு அங்குள்ள வளாகத்தில் 100 கடைகள் (ஒரு ஏடிஎம் தவிர) பயன்பாட்டுக்கு வர உள்ளன. நகராட்சி வருமானம் கருதி இந்த 99 கடைகளை ஏலமிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கவுன்சிலர் குமார் (பாஜக) கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட நகர்மன்றத்தலைவர் கார்மேகம், கடந்த 1992 ஆம் ஆண்டு புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த போது தங்களது பெயரில் கடைகளை வாடகைக்கு ஏலம் எடுத்தோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதில் யாரேனும் இறந்திருப்பின் அவர்களது வாரிசுதாரர்களுக்கு கடை ஒதுக்கப்படும்.
பெயர் மாற்றம் செய்துள்ளோருக்கு கடை வழங்கப்பட மாட்டாது என்றார்.
கேணிக்கரை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கவுன்சிலர்
நாகராஜன், கவுன்சிலர் ரமேஷ் கண்ணா தனது வார்டில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய சாலையை மூட வேண்டும். தனது வார்டில் குடிநீர் விநியோகம் தொய்வின்றி வழங்க வேண்டும் என தனபாண்டியம்மாள் (அமமுக ) கோரிக்கை விடுத்தனர். கவுன்சிலர்கள் விடுத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நகர்மன்ற தலைவர் கார்மேகம் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை
தவேக சார்பில் மகளிர் தின விழா
முதுகுளத்தூர், கமுதி வட்டங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கல்
திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
மாவட்ட அளவில் யோகாசன போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலவச பல் மருத்துவ முகாம்

September 17, 2025
135 Views
மதுரை காவல் பயிற்சி பள்ளியை துவக்கி
வாய்க்காலில் தண்ணீர் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து
மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தையும் மும்மொழித் திட்டத்தையும் தவெக அரசு ஏற்கக் கூடாது: வைகோ வலியுறுத்தல்
ராமேஸ்வரத்தில் பாபர் மசூதி இடிப்பு‌ தினத்தை முன்னிட்டு ரயில்வே போலீசார் தீவிர பாதுகாப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account