இராமநாதபுரம், மார்ச் 4 –
ராமநாதபுரம் வன உயிரின கோட்டம் சார்பில், வன உயிரின நாளை முன்னிட்டு இயற்கை பாதுகாப்பில் முன்னோடிகளுக்கான விருது வழங்கும் விழா ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அரங்கில், மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் தலைமையில் நடந்தது.
இவ்விழாவில் 2025-2026-ம் ஆண்டில் இயற்கை சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளும் பணிகளில் ஈடுபட்டு வந்தமைக்காக, ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசனுக்கு, இயற்கை பாதுகாப்பில் முன்னோடி விருது மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்வில் ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பாளர் அகில் தம்பி, கூடுதல் ஆட்சியர் திவ்யான் ஷூநிகம், மீன் வளத்துறை துணை இயக்குனர் சின்ன குப்பன் மற்றும் உதவி வனப் பாதுகாவலர் கோபிநாத், வனச் சரகர் திவாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.



