களியக்காவிளை, ஆக. 29 –
விநாயகர் சதுர்த்தி தினத்தன்று இந்து முன்னணி சார்பில் மேல்புறம் ஒன்றிய அளவில் பூஜைக்கு 110 இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் ஆகஸ்ட் 31-ம் தேதி குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவன்று இந்து முன்னணி சார்பில் ஆகஸ்ட் 27-ம் தேதி 110 இடங்களில் விநாயகர் சிலைகள் பூஜைக்காக பிரதீஷ்டை செய்யப்பட்டது. மேல்புறம், அருமனை, களியக்காவிளை, மலையடி கழுவன்திட்டை உட்பட 110 இடங்களில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடங்களிலும் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஐந்து நாட்கள் பூஜைக்கு பிறகு ஆகஸ்ட் 31-ம் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக மேல்புறம் ஈஸ்வர கால பூதத்தான் கோயில் கொண்டு வரப்படுகிறது.
மேல்புறம் ஈஸ்வர கால பூதத்தான் கோயிலில் நடக்கும் நிகழ்ச்சியில் விஜய குமார் தலைமை வகிக்கிறார். சமய வகுப்பு மாணவியர் இறைவணக்கம் பாடுகின்றனர். ஜோதிஷ் ஜெயக்குமார் வரவேற்கிறார். செயலாளர் சனல்குமார், விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் கங்காதரன் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் அரசுராஜாஜி நெல்லை கோட்ட செயலாளர் கண்ணன் ஜி, மேல்புறம் ஒன்றிய துணைத் தலைவர் சந்தோஷ் குமார், பா.ஜ.க மேல்புறம் ஒன்றிய தலைவர் சரவண வாஸ் நாராயணன் உள்ளிட்டோர் பேசுகின்றனர்.
தொடர்ந்து நாடக்கும் பிள்ளையார் ஊர்வலத்தினை புலவர் ரவீந்திரன் கொடி அசைத்து துவக்கி வைக்கிறார். இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்கின்றனர். மேல்புறம் ஈஸ்வர கால பூதத்தான் கோயிலில் இருந்து துவங்கும் பிள்ளையார் ஊர்வலமானது வட்ட விளை, சமுவன் திட்டை, குழித்துறை சந்திப்பு, வெட்டுமணி சந்திப்பு வழியாக குழித்துறை தாமிரபரணி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படுகிறது.


