விழுப்புரம், ஆகஸ்ட் 11 –
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதிலியிருந்து விழுப்புரம் மாவட்டத்தில் 3 முன்னாள் ராணுவ மாற்று திறனாளிகளுக்கு மொத்தம் மூன்று லட்சம் மதிப்பீட்டில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரகுமான் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குநர் ஆயிஷா பேகம் மற்றும் விழுப்புரம் முன்னாள் படை வீரர் நல அமைப்பாளர் விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.



