போதை இல்லா தமிழகம் தினத்தை முன்னிட்டு, முதுகுளத்தூர் காவல் உட்கோட்டம் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகம் பேரணியை தொடங்கி வைத்தார்.
அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., என்.சி.சி., தேசிய பசுமைப்படை, சாரணர் படை மாணவர்கள் பங்கேற்று, போதைப்
பொருளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியபடி பேருந்து நிலையம் வரை பேரணியாக சென்றனர். தொடர்ந்து போதைப்
பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
முதுகுளத்தூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி



