ராமநாதபுரம், அக். 1 –
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 2-ந் தேதி இரவு ராமநாதபுரம் வருகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரத்திற்கு வரும் 2-ந் தேதி இரவு வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமான மூலம் மதுரை வரும் அவர் அங்கிருந்து கார் மூலம் ராமநாதபுரம் வருகிறார். 2-ந் தேதி இரவு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி இரவு ஓய்வு எடுக்கிறார்.
முதல்வர் மறுநாள் காலை 3-ந் தேதி காலை 10 மணி அளவில் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு ராமநாதபுரத்தை அடுத்துள்ள பேராவூர் அருகே உள்ள புல்லங்குடி பகுதியில் நடைபெறும் பிரம்மாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். அங்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டத்தில் 55 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். குறிப்பாக விழா மேடையில் வைத்து முதல்வர் தனது கையால் சுமார் 30 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதைத்தொடர்ந்து எழுச்சிமிகு சிறப்புரை ஆற்றும் முதல்வர் மாவட்டத்தில் நடந்து முடிந்துள்ள பல்வேறு திட்ட பணிகளை திறந்து வைக்கிறார். மேலும் புதிதாக ஏராளமான நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். இதை தொடர்ந்து சுமார் 11:30 மணி அளவில் கார் மூலம் மதுரை செல்லும் முதல்வர் அங்கிருந்து சென்னை செல்கிறார். தமிழக முதல்வர் ராமநாதபுரத்திற்கு வருவதை ஒட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் காவல்துறையின் சார்பிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.



