கருங்கல், ஆக. 11 –
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மிடாலம் ஊராட்சி குருசடி அருகில் பொதுமக்கள் வசதிக்காக பல்நோக்கு கட்டிடம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பல்நோக்கு கட்டிடம் அமைக்கும் பணி துவக்க விழா குருசெடி அருகில் நடந்தது.
ராஜேஷ்குமார் எம்எல்ஏ கட்டிடம் அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன், ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஜஸ்டின், மாநில மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான், மாநில பொதுக்குழு உறுப்பினர் டைட்டஸ், மிடாலம் பங்கு பணியாளர் விஜின் பிரைட் உட்பட பலர் பங்கேற்றனர்.



