மார்த்தாண்டம், செப். 5 –
தமிழ்நாடு பேரிடர் ஆணையம் சார்பில் பல்நோக்கு பாதுகாப்பு மைய தன்னார்வருக்கான பயிற்சி முகாம் மார்த்தாண்டன்துறையில் நடைபெற்றது. சென்னை பேரிடர் ஆணையத்தின் கீழ் பயிற்சி பெற்ற அரசு ஊழியர்கள் தன்னார் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தனர். இரண்டு நாட்கள் நடந்த முகாமில் இயற்கை பேரிடர்கள் நடந்தால் குடும்ப உறுப்பினர்களை பாதுகாப்பது எப்படி? விலங்குகளை பாதுகாப்பது எப்படி என செயல்முறை விளக்கம் செய்யப்பட்டது. முகாமில் ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



