மார்த்தாண்டம், ஆக. 25 –
குமரி மாவட்டத்தில் இயங்கும் 24 மக்கள் மருந்தகங்கள் ஒன்றிணைந்து அம்மாவன் பவுண்டேஷன் எனும் அறக்கட்டளையின் சார்பில் பாரதப் பிரதமர் மோடியின் தாயாரான ஹிரா பென் மோடியின் பெயரில் தாய் தந்தையரை இழந்த 27 ஏழை மாணவ மாணவிகளை தேர்ந்தெடுத்து மாதந்திர கல்வி உதவித் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மார்த்தாண்டம், அனஸ்வரா பவுண்டேஷன் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் உண்ணாமலை கடை பேரூராட்சியின் முன்னாள் தலைவர் ஜெயசீலன், ஸ்ரீகலா ரமணன், கொல்லங்கோடு அருண்குமார், அலமாட்டில் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு முதல் தவணை உதவித்தொகை வழங்கினார்கள். விழாவில் அம்மாவன் பவுண்டேஷனின் தலைவர் விஜய குமார் தலைமை தாங்கினார். கேப்டன் வனஜெயன் வரவேற்புரை நிகழ்த்தினார். நிர்வாக அதிகாரி சுனு குமார் நன்றி கூறினார்.



