சென்னை, மே 23 –
சென்னை சேப்பாக்கத்தில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இத்துறையின் முதன்மை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட துறை ரீதியிலான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், வெப்பநிலை மாற்றங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், மக்களுக்கு அறிவுரை வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் பருவ மழை தொடங்க உள்ள நிலையில் அவற்றை எதிர்கொள்வது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் வருவாய்த் துறை சார்பாக அனைவரும் இணைந்து பணிகளை மேற்கொள்ள உள்ளதாக கூறிய அமைச்சர் அனைவரும் பாராட்டும் வகையில் துறையை எடுத்துச் செல்ல உள்ளதாக தெரிவித்தார்.



