சங்கரன்கோவில், ஜூலை 22 –
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளப்பனேரி கிராமம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து கோவில்பட்டிக்கு பேருந்து இயக்க வேண்டுமென தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவிடம் மாணவ மாணவிகள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். அவர்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ராஜா எம்எல்ஏ இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேசி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று வரும் வகையிலும் பொதுமக்கள் தங்கள் பணிகளுக்காக வெளியில் சென்று வரும் வகையிலும் கோவில்பட்டியில் இருந்து வெள்ளப்பனேரிக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
ராஜா எம்எல்ஏவின் கோரிக்கையை ஏற்று உடனடியாக புதிய வழித்தடத்தில் பேருந்து துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய வழித்தட பேருந்தை துவக்கி வைத்தார். இந்த பேருந்தானது வெள்ளப்பனேரியிலிருந்து இருந்து கிளம்பி கைப்படம், மடத்துப்பட்டிவிலக்கு, சிதம்பரபரம், கழுகுமலை வழியாக கோவில்பட்டிக்கு செல்கிறது. இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில் நுட்ப அணி வீமராஜ், பூலித்தேவர் மக்கள், முன்னேற்ற கழக மாநில கொள்கை பரப்பு செயலாளர் முருகன், கிளை செயலாளர் மகாராஜன் மற்றும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த ராஜா எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்தனர்.