By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
மதுரைமாவட்டம்

மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை

Last updated: July 13, 2024 1:06 pm
July 13, 2024
91 Views
Share
SHARE

கோயில் நகரமான மதுரை மாநகரில் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தொடங்கப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய 50 சிறப்பு பிரிவுகளில் நிபுணத்துவம் கொண்ட மருத்துவர்களும், செவிலியர்களும் மற்றும் பிற தொழில்நுட்ப பணியாளர்களும் செயலாற்றும் இம்மருத்துவமனையில் 350 படுக்கை வசதிகள் நிறுவப்பட்டுள்ளன. அதிநவீன மருத்துவ தொழில்நுட்ப வசதிகள் கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கும் இம்மருத்துவமனை, சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள மக்களுக்கு உலகளவில் பிரீமியம் தரத்தில் சுகாதார பராமரிப்பு சேவைகளை வழங்குவது மீது தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது. மிக விமரிசையாக நடைபெற்ற மருத்துவமனை திறப்பு விழாவில் இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சஞ்சய் கிஷன் கவுல் பங்கேற்று மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை திறந்து வைத்தார். மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ராஜேந்திரன், தலைவர் டாக்டர். குருசங்கர், துணைத்தலைவர் காமினி குருசங்கர் மற்றும் மருத்துவ இயக்குநர் டாக்டர். ரமேஷ் அர்த்தநாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

370,000 சதுர அடி என்ற மிகப்பெரிய நிலப்பரப்பில் இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கப்பட்டிருக்கிறது. மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்திற்கு அடுத்த இடத்தில் ஒன்பது தளங்களை கொண்ட கட்டிடமாக மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உருவாக்கப்பட்டிருக்கிறது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு மட்டுமன்றி நாடெங்கிலும் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் வரும் நோயாளிகளுக்கு பிரீமியம் தரத்தில் மருத்துவ சேவைகளை இது வழங்கும். 

இது தொடர்பாக டாக்டர். குருசங்கர் கூறியதாவது: “இப்புதிய மருத்துவமனை நேர்த்தியான சிகிச்சையை பிரீமியம் வசதிகளுடன் உலகளாவிய உயர் தொழில்நுட்ப உதவியுடன் உலகத்தரத்திலான நிபுணத்துவத்துடன் வழங்கும். இவை அனைத்தும் குறைவான கட்டணங்களுடன் வழங்கப்படும் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.

மருத்துவமனை இயக்குநர் டாக்டர். ரமேஷ் அர்த்தநாரி பேசுகையில், “இதய சிகிச்சை, உயர் துல்லியமிக்க புற்றுநோய் கண்டறிதல் சிகிச்சை மற்றும், உறுப்பு மாற்று சிகிச்சை, மேம்பட்ட நரம்பியல் மற்றும் வலிப்புத்தாக்கத்திற்கான சிகிச்சை, நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கான சிகிச்சை, கல்லீரல் மற்றும் பல்வேறு சிறப்பு பிரிவுகள் மற்றும் பித்தநீர் நோய்களுக்கான சிகிச்சை, குறைவான ஊடுருவல் கொண்ட சிகிச்சை மற்றும் ரோபோடிக் அறுவைசிகிச்சை, எலும்பு மற்றும் மூட்டு நோய்களுக்கான சிகிச்சை,  நுரையீரல் நோய்களுக்கான சிகிச்சை , இயன்முறை மருத்துவம் மற்றும் மறுவாழ்வு, முதுகுத்தண்டு கோளாறுகளுக்கு சிகிச்சை, மூலக்கூறு கண்டறிதல்கள், மருத்துவ இமேஜிங் சேவைகள், இன்டர்வென்ஷனல் கதிர்வீச்சியல் ஆகியவை உட்பட பல்வேறு சிறப்பு பிரிவுகள் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவுகளில் முதன்மையான மருத்துவ நிபுணர்களை கொண்டிருக்கும் இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மிக சமீபத்திய மருத்துவ தொழில்நுட்பத்தை சிகிச்சை நிபுணத்துவத்துடன் ஒருங்கிணைப்பதன் மூலம் சுகாதார சேவைகளை மிக நேர்த்தியாக வழங்குவதை இம்மருத்துவமனை தனது நோக்கமாக  கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார். கூடுதலாக, அன்னையர் நலம் மற்றும் வளர்க்கரு மருத்துவ சேவைகளோடு குழந்தைகளுக்கான துணைப்பிரிவுகளில் சிகிச்சையை வழங்கும் குழந்தைகள் மருத்துவமனை என்ற சிறப்பு பிரிவும் இப்புதிய மருத்துவமனையில் இடம்பெறுகிறது. சிறார்களுக்கான இதயவியல் சிகிச்சை, சிறார்களுக்கான இதய அறுவைசிகிச்சை மற்றும் உறுப்புமாற்று சிகிச்சை, வாத நோய், உட்சுரப்பியல், நுரையீரலியல், நரம்பு அறிவியல், சிறார்களுக்கான மரபணுவியல், குடல் இரைப்பை அறுவை சிகிச்சையியல், சிறார்களுக்கான எலும்பு முறிவு சிகிச்சைகள் மற்றும் சிறார்கள் மற்றும் வளர்க்கருக்களுக்கு அறுவைசிகிச்சை ஆகியவை உட்பட குழந்தைகளுக்கான அனைத்து துணை சிறப்பு பிரிவுகளிலும் சிகிச்சைகள் இங்கு வழங்கப்படும்.

விளம்பரம்

You Might Also Like

வாக்குச்சாவடி முகவர் ஆலோசனைக் கூட்டம்
மணவாளக்குறிச்சியில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை – போதையாசாமி கைது
தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம்
எதிர்த்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

கிளப் ஆப் கிரீன் பேரடைஸ் சங்கத்தின் பதவியேற்பு விழா

August 14, 2024
56 Views
ஒரே ஆண்டில் 53 பேருக்கு பேஸ்மேக்கர் கருவி
சிவகங்கை தமுமுக மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து ரத்ததான முகாம் நடத்தினர்; சமஸ்தானம் ராணி மதுராந்தகி நாச்சியார் துவக்கி வைத்தார்!
தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் கல்லூரி அளவில் நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு முரசொலி எம்பி வழங்கினார்
மாவட்ட ஊராட்சியின் சாதாரன கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account