சூலூர், ஜூலை 24 –
கோவை மாவட்டம் சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக குழு உறுப்பினர் ராஜீவ் காந்தி அவர்கள் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்து அவர் பேசுகையில்: இந்த முயற்சியின் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பள்ளி மாணவர்களின் இல்லங்களில் இளையோர் நூலகம் அமைப்பதற்கு இலக்கு வைத்துள்ளது. பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள 350-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆண்டுக்கு பத்து நூல்களை புத்தகத் தூதுவர்கள் தங்களது சொந்த பொறுப்பில் வழங்கி அதன் மூலம் ஐந்து ஆண்டுகளில் மாணவர்கள் 50 நூல்களை சேகரித்து இருப்பர். இதற்காகவே சீர் வாசகர் வட்டம் மாதம் தோறும் ஒரு சிறந்த புத்தகத்தை வெளியிட உள்ளது.
இந்த நூல்கள் இலக்கியம், சிறார் இலக்கியம், வரலாறு, அறிவியல், சூழலியல், மருத்துவம் போன்ற வகைமைகளில் இருக்கும் நூல்கள் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் மாதத்திற்கு ஒருமுறை அந்த நூல் குறித்து கலந்துரையாடலும் நடக்கவுள்ளது என்று கூறினார். இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.