ஊத்தங்கரை, செப். 29 –
கிருஷ்ணகிரி மாவட்டம் அந்தேரிப்பட்டி அருகே உள்ள சாலஜோகிப்பட்டி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. புதியதாக கட்டப்பட்ட உயர்நிலை நீர்த்தேக்க தொட்டி நீர் ஏற்றும் பணியானது கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நடைபெற்றது. அப்போது மின்மோட்டாரின் குறைந்த அழுத்தம் காரணமாக நீர் ஏற்ற முடியாமல் போனதால் அப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக சரிவர குடிநீர் கூட இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று சாலஜோகிபட்டி கிராமத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் மறியல் ஈடுபட்டனர்.
இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய தனியார் பேருந்துகள் மற்றும் கம்பெனிக்கு செல்லக்கூடிய வாகனங்களும் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பாதிப்புக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மத்தூர் காவல் ஆய்வாளர் பத்மாவதி எஸ் பி, ஏட்டு ஜெயவேல் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களிடையே பேச்சு வார்த்தை நடத்தி அனைவரும் கலைந்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர்.



