தருமபுரி, ஜூலை 19 –
தருமபுரி BSNL அருகில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கீழ்கண்ட கோரிக்கைளை வலியுறுத்தி மாவட்ட கட்டுமான தொழிற்சங்க சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு வரவேற்புரை கட்டுமான அமைப்புசாரா மாநில தலைவர் முருகன், சர்வதேச உரிமைய கழக மாவட்ட தலைவர் கோபிநாதன் தலைமையில் தமிழ் மாநில மக்கள் கட்டிட தொழிலாளர் அமைப்புசாரா தொழிலாளர் பேரவை தொழிற்சங்க கூட்டமைப்பு மண்டல பொதுச் செயலாளர் மாது முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் அசோக், மாநில துணை பொதுச்செயலாளர் கிஷோர், மாநில பேரவை ஆலோசகர் சின்னசாமி, வடக்கு மண்டல பொதுச்செயலாளர் சுகந்தி முருகன், மகளிர் அணி சித்ரா, மாநில பொருளாளர் கலைவாணன், மகளிர் அணி தனலட்சுமி, சிறப்பு அழைப்பாளர்கள் சர்வதேச உரிமைகள் குழுமத்தின் பெருந்தலைவர் மனித உரிமை கழகத்தின் நிறுவனர் சுரேஷ் கண்ணன், சிறப்புரை சர்வதேச உரிமைகள் கழக பொதுச்செயலாளர் சிவஞானம், மனித உரிமை கழக அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் வழக்கறிஞர் ஆனந்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
கோரிக்கைகள்: அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு தனித்துறையை உருவாக்க வேண்டும். நலவாரியத்தில் பதிவுசெய்யும் தொழிலாளர்கள் முன்பிருந்தது போலவே அரசு கட்டணம் வசூலிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள அவல நிலையை களைதல். தொழிலாளர் உரிமை மீட்பு குறித்தும், தொழிற்சங்க உரிமை மீட்பு குறித்தும், பொதுமக்கள் உரிமையை நிலை சில நாட்டுவது குறித்தும், தருமபுரியில் உள்ள சனத்குமார் நதியை தூர் வாருவது குறித்தும், தருமபுரியில் பாதாள சாக்கடை பள்ளம் மூடாமல் இருப்பதை கண்டித்தும், தொழிலாளர் நல வாரியத்தில் தொழிலாளர்களுக்கு காலதாமதமாக நிதி வழங்குவது குறித்தும், 60 வயது முடிந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்காமல் மாசக்கணக்கில் காலம் தாழ்த்துவது குறித்தும் தொழிலாளர்களுக்கு கண் கண்ணாடிக்கு வழங்கும் நிதி, டாக்டர்களுக்கு பீஸ் பற்றா குறைவால், தமிழ்நாடு தொழிலாளர் வாரியத்தில் கட்டணம் உயர்த்தி வழங்கவும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கட்டுமான மற்றும் அவன் பேச்சாளர் நல வாரியத்தில் கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் ராஜா, மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட துணைத் தலைவர் சின்னசாமி, மாவட்ட ஹலோ சேகர் துரை, பாலக்கோடு ஒன்றியம் மாதையன், பாப்பிரெட்டி ஒன்றிய ரவி, முருகேசன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் திருச்சி மாவட்ட தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.