திருப்பரங்குன்றம், ஆகஸ்ட் 13 –
மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தி பகுதியில் நடைபெற திட்டமிடப்பட்டு கடந்த சில வாரங்களாக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தவெக மாநாடு வரும் 25-ம் தேதி நடத்தப்பட அறிவிக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்பு பணி காரணமாக வரும் 21-ம் தேதி வியாழக்கிழமை என மாற்றி அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறை கேட்ட 42 கேள்விகளுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறை சார்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்னும் மாநாடு நடைபெறுவதற்கு 8 நாட்களே உள்ள நிலையில் 75% பணிகள் நிறைவடைந்துள்ளது. மேலும் தவெக வின் 2-வது மாநில மாநாடு நடைபெறுவதற்கான விழா மேடை ரேம் ஒர்க் மேடை, பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் பகுதிகளில் பேரிக் கேட்கள், அமர்ந்திருக்கும் பகுதிக்கு குழாய் மூலம் தண்ணீர் வசதி, வாகன பார்க்கிங் உள்ளிட்ட ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.


