திருப்பூர், செப்டம்பர் 02 –
அமெரிக்கா அரசின் 50% வரிவிதிப்பினால் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களை கண்டுகொள்ளாமல் கைவிட்ட ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருப்பூர் ரயில் நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மதசார்பற்ற கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மாநில மகிளா காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத், மாநகர மாவட்ட தலைவர் கிருஷ்ணன் ஆலோசனையின் படி மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் மாவட்ட தலைவி ஆஷா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.



