நாகர்கோவில், நவம்பர் 17 –
நாகர்கோவில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறுகின்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை தொடங்கி நடந்தது. இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்க கேட்டும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அழித்தனர். கலெக்டர் அழகுமீனா கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் கணினிகளில் மனுக்கள் ஆன்லைனில் பதிவு செய்யும் படிகள் நடந்தது. இங்கு நீண்ட வரிசையில் நின்று மக்கள் மனுக்களை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் மனுக்கள் எழுதிக் கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வருகின்ற அவர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்று கூறி அவ்வப்போது கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி திடீர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்ற நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. பொதுமக்கள் கொண்டு வந்த உடைமைகள், தண்ணீர் பாட்டில் போன்றவற்றை போலீசார் கலெக்டர் அலுவலக வாசல் பகுதியில் தீவிரமாக பரிசோதனை செய்தனர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படும் செய்யப்பட்டிருந்தது.


