குளச்சல், செப். 10 –
குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தேங்காய்பட்டணம் அருகே மாதாபுரத்தை சேர்ந்த ஜெயின் மெலார்டு (46) மீது போக்ஸ்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா உத்தரவு பிறப்பித்தார். இதன் பேரில் குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.



