திருப்பூர், ஆகஸ்ட் 5 –
திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனஸ்ட்ராஜ். இவர் திமுக வடக்கு மாவட்ட 15 வேலம்பாளையம் பகுதி கழக இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். இவர் முத்துவேல் என்பவருடன் இணைந்து கலெக்ஷன் ஏஜென்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி முத்துவேல் உறவினரான சரவணன் என்பவர் அருகிலுள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திய போது அங்கு இருவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற முத்துவேல் சமாதானம் செய்து அழைத்து வந்துள்ளார். இந்த தகவலை அறிந்த குட்டி குமார், வினோத்குமார், மற்றும் வடக்கு மாவட்ட திமுக முக்கிய நிர்வாகி இணைந்து சரவணனின் தலையில் தாக்கி காயம் ஏற்படுத்தி விட்டு ஆனஸ்ட்ராஜ் அடித்ததாக மருத்துவமனையில் சேர்ந்து புகார் அளிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் இதற்கு ஒத்துழைக்கும் பட்சத்தில் சரவணனுக்கு தேவையானதை செய்து தருவதாக உறுதி அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சரவணனை அடித்து மண்டையில் காயம் ஏற்படுத்தி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் ஆனால் சரவணன் இதில் உடன்பாடு ஏற்படாததால் மருத்துவமனைக்குச் செல்லாமல் மீண்டும் திரும்பி வந்து ஹானஸ்ட் ராஜ் மற்றும் முத்துவேல் இடம் தகவலை தெரிவித்துள்ளார். எனவே தங்கள் மீது படி சுமத்தி சிறைக்கு அனுப்ப சதி திட்டம் தீட்டிய குட்டி குமார் வினோத்குமார் மற்றும் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக முக்கிய புள்ளியின் மீதும் சரவணன் தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆனஸ்ட்ராஜ் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
இது தொடர்பாக விசாரிக்கையில் ஆண்டின் துவக்கத்தில் ஹானஸ்ட் ராஜ் கபடி போட்டி நடத்தியதாகவும் இதில் குட்டி குமார் வினோத்குமார் உள்ளிட்ட அவருடன் தகராறு எழுந்து வினோத்குமார் கைது செய்யப்பட்டதாகவும் அந்த முன் பகையை கொண்டும், வடக்கு மாவட்ட திமுக முக்கிய புள்ளியுடன் கூட்டு சேர்ந்து இந்த சதி திட்டம் தீட்டப்பட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக பகுதி கழக இளைஞரணி துணை அமைப்பாளர் புகார் அளித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



