அரியலூர்,மே:08
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில் தேரடி தெரு, கீழ வீதியில் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஒரு மாதமாக ஊராட்சி நிர்லவாகத்தின் மூலம் சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறி இன்று செந்துறை – ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த செந்துறை சப்இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கடந்த ஒரு மாதத்தில் மூன்று நாட்கள் மட்டுமே குடிநீர் முறையாக வந்தது எனவும், சிலர் மோட்டார் வைத்து நீரை உறிஞ்சுவதால் தண்ணீர் கிடைக்கவில்லை என்றும் கூறினர். இதற்கு பதில் அளித்த ஊராட்சி நிர்வாகத்தினர் போதிய அளவு மின்சாரம் கிடைக்கவில்லை அதனால் நீண்ட நேரம் குடிநீர் வழங்க இயலவில்லை என தெரிவித்தனர்.மேலும் கால்நடை மற்றும் குளிப்பதற்கு அருகில் இருந்த ஏரியை பயன்படுத்த வந்த மக்கள் தற்போது நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணி காரணமாக ஏரியில் இருந்து மீன்கள் இறந்து அழுகி துர்நாற்றம் வீசுவதால் அங்கு குளிக்கவும் துணி துவைக்கவும் சிரமப்படுகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகத்தினர் அதிக நேரம் குடிநீர் வழங்க வேண்டும் என கூறினர் குடிநீர் குழாயில் பொருத்தப்பட்டுள்ள மின்மோட்டார்கள் அகற்றி விரைவாக குடிநீர் வழங்கப்படும் என்ற அதிகாரி தெரிவித்ததை எடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது, இதனை எடுத்து ஒரு மணி நேரத்துக்கு பிறகு சந்திரசேகரன் நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீரானது.