கடையநல்லூரில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் . பேருந்து நிறுத்தம் அருகே நீர்மோர், தண்ணீர் பந்தலை அமைச்சர் கே கே எஸ் எஸ் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்
தென்காசி. மே.5
தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இதையடுத்து கடையநல்லூர் நகர திமுக சார்பில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் நீர்மோர், சர்பத் தர்பூசணி தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்ட நிலையில் இன்று தென்காசி தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் அணியின் மாவட்ட துணைச் செயலாளர் முகைதீன் கனி ஏற்பாட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிஅருகில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாண்புமிகு வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ராமச்சந்திரன் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, நீர்மோர், குளிர்பானம் இவைகளை வழங்கினார் இதில் திமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர் .