திருப்பத்தூர், ஜூலை 16 –
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியானது பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர் நாகராஜ் தலைமையேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஆசிரியர் தேவராஜ் (ஓய்வு), முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பன்னீர்செல்வம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நடராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் மகாராணி ராமநாதன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வினோத்குமார், முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சங்கர், பிஎஸ்என்எல் ஊழியர் ஏழுமலை, லாவண்யா லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பெரியகரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வினோத்குமார் மாணவர்களுக்கு 16 மிதிவண்டிகளை அளித்தார். மாணவ மாணவிகளின் சேர்க்கை அதிகரிக்கும் விதமாக மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
மேலும் இவ்விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, சிலம்பம், கராத்தே, குழு பாடல், பேச்சுப்போட்டி, காமராஜர் வேடம் என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியினை நவம்பர் 1 மக்கள் நலச் சங்கத்தின் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட செயலாளர் சத்தியராஜ், கேபிள் டிவி சுந்தரேசன், கந்திலி ஒன்றிய தலைவர் திருப்பதி ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சியினை பகுதி நேர தமிழ் ஆசிரியர் நடராஜன் தொகுத்து வழங்கினார். நிகழ்வின் இறுதியில் ஆசிரியை மது பிரியா நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழு, வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



