சென்னை, மே – 12,
பெண் காவல் அதிகாரிகளை ஊடகங்களில் பாலியல் ரீதியாக கொச்சை படுத்தி பேசிய சவுக்கு சங்கரை கண்டித்து தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசினா சையத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முனைவர் தோழர் சுந்தரவல்லி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் இந்த ஆர்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ராம் மோகன், வடசென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் திரவியம் மற்றும் மாநில துணை தலைவிகள் ஆலிஸ் மனோகரி. சாந்தி ஜோஸ்பின், மாமன்ற உறுப்பினர்கள் சுகன்யா, சுமதி, தென் சென்னை மாவட்ட தலைவி உமா, வடசென்னை மாவட்ட தலைவி தாரா சரஸ்வதி நாலடியார், சுசிலா பூங்கொடி, சுமதி மற்றும் மகினா கால்கிரஸ் நிர்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோர் இ.தில் கலந்து கொண்டனர்