தென்காசி, அக்டோபர் 31 –
தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் சிகிச்சைக்கு வந்ததாகவும் இம்மருத்துவமனைக்கு பணியமர்த்தப்பட்ட மகப்பேறு மருத்துவர் வேறு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கருதி பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தெரிவிக்கப்பட்ட புகார் மீது மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குனர் மரு.பிரேமலதா அவர்கள் நேரடியாக அங்கு சென்று அங்கு இருந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிர்வாக காரணங்களுக்காக மகப்பேறு மருத்துவர் தேவை ஏற்பட்டதன் பொருட்டு அருகில் உள்ள சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை சீமாங் சென்டர் பணிக்கு இன்று ஒரு நாள் மட்டும் மகப்பேறு மருத்துவர் அனுப்பி வைக்கப்பட்டதன் விவரத்தை எடுத்துக் கூறியதன் பேரில் அங்கிருந்து மக்கள் கலைந்து சென்றனர்.
மேற்கண்ட புகார் பெறப்பட்டவுடன் இணை இயக்குநர் உத்தரவின்படி கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு மகப்பேறு மருத்துவரை உடனடியாக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளிக்கு சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது. மேலும் அந்த மகப்பேறு தாய்க்கு இணை இயக்குநர் மரு. பொ. பிரேமலதா அவர்களே உடனிருந்து, மயக்க மருத்துவர் மரு. போத்திராஜ் ஒத்துழைப்புடன் அறுவை சிகிச்சை மூலம் நடை பெற்ற பிரசவத்தில் ஆண் குழந்தை 2.600 எடையுடன் நலமுடன் உள்ளது. இந்நிகழ்வில் நோயாளியின் உறவினர்கள் மற்றும் ஆர்பாட்டம் செய்தவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
பிரசவ சிகிச்சைக்கு மகப்பேறு மருத்துவர் பணி புரிந்து வருவதால் பொதுமக்கள் மகப்பேறு சேவையினை பயன்படுத்தி கொள்ள இணை இயக்குநர்
கேட்டுக் கொண்டார்.



