நாகர்கோவில், ஏப்ரல் 16 –
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆஸ்டின் மற்றும் பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி ஆகிய இருவருமே பிரம்மசாரிகள். இந்த இருவருக்கும் இடையே தான் நாகர்கோவில் தொகுதியில் போட்டியே நடக்கிறது. இதில் ஜெயிக்க போவது ஆஸ்டின் என்பது உறுதி ஆகி விட்டது என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆஸ்டின் மற்றும் பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி ஆகிய இருவருமே பிரம்மசாரிகள் தான். இந்த இரண்டு பேர் தான் போட்டியில் இருக்கிறார்கள். இருவருமே நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் எம்எல்ஏ க்களாகவும் இருந்துள்ளார்கள். எனவே போட்டி என்பது இந்த இருவருக்குள் தான் இருக்கும். அரசியலில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை பார்க்கும் போது களத்தில் ஜெயிக்க போவது ஆஸ்டினாக தான் இருப்பார். ஆஸ்டினின் வெற்றி உறுதியாகி விட்டது என்றே சொல்லலாம்.
காரணம் என்னவென்றால் திமுகவுக்கு ஆதரவாக பலமான கூட்டணி இருப்பது தான். காங்கிரஸ், விசிக, தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் ஆஸ்டினுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறார்கள். ஆனால் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக களத்தில் இருக்கிறதா என்பது தெரியவில்லை.
அதிமுகவின் முன்னாள் நிர்வாகிகளே ஆஸ்டினுக்கு மறைமுக ஆதரவு கொடுத்து கொண்டிருக்கிறார்கள். அதிமுகவின் உள்ளடி வேலைகளே ஆஸ்டினை வெற்றி பெற வைத்து விடும். மேலும் ஆஸ்டினுக்கு சிறுபான்மை சமுகத்தினரின் ஆதரவும் நன்றாகவே இருப்பதால் ஆஸ்டின் ஜெயிக்க போவது உறுதி. இவ்வாறு முத்துக்குமார் கூறினார்.



