சங்கரன்கோவில், ஆகஸ்ட் 14 –
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேல நீலிதநல்லூர் மேற்கு ஒன்றியம் பாண்டியாபுரம் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் மக்களை தேடி அரசு செல்லும் திட்டமான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
இதில் பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் பொது மக்களின் தேவைகள் குறித்த மனுக்களை பெற்றுக் கொண்டனர். இந்த முகாமை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ மற்றும் தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
இந்த முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலர்கள் கண்ணன் செல்வராஜ், தாசில்தார் பரமசிவன், ஒன்றியச் செயலாளர் ராமச்சந்திரன், கிளை செயலாளர்கள் ஐயப்பன், சிவலிங்க பெருமாள், சேர்மக்கனி, முருகன், சரவணன், ராக்கையா, சிவகுருநாதன், வர்த்தக அணி அமைப்பாளர் மகேஷ், ராஜேந்திரன், பாஸ்கர், மயில்வாகனன், முத்தமிழ் செல்வன், சுப்பையா, மாசிலாமணி, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயகண்ணன் மற்றும் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



