நாகர்கோவில், அக். 27 –
கன்னியாகுமரி மணக்குடி ஊராட்சியிலுள்ள இராட்சத நீர் குழாய்கள் கொண்டு செல்லும் பாலம் பழுதடைந்து உடைந்து விடும் நிலையில் உள்ளது. பாலம் முழுவதுமாக உடையுமாயின் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி வள்ளங்கள் கடலுக்குள் செல்ல முடியாமல் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தப் பாலத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை இன்று கள ஆய்வு செய்து அதற்கு நிரந்தரமான ஒரு தீர்வை விரைவில் எட்டி அப்பகுதி மீனவர்களுக்கு எந்த வாழ்வாதார சிக்கல்களும் ஏற்படாத வண்ணம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சி சார்பாக மரிய ஜெனிபர் மனு அளித்துள்ளார்.
இந்நிகழ்வில் மாநில மீனவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜெயன்றீன், மாநில ஒருங்கிணைப்பாளர் தீபக் சாலமன், மண்டல செயலாளர் பன்னீர் செல்வம் மற்றும் அகஸ்தீஸ்வர மேற்கு மாவட்ட தலைவர் சுந்தரேசன் உடன் இருந்தனர்.



